அக்டோபரில் தொடங்கும் ’அஜித் 61’ படப்பிடிப்பு

அக்டோபரில் தொடங்கும் ’அஜித் 61’ படப்பிடிப்பு

அக்டோபரில் தொடங்கும் ’அஜித் 61’ படப்பிடிப்பு
Published on

‘வலிமை’ படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் ‘அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் தொடங்கவிருக்கிறது.

’வலிமை’ படத்திற்குப் பிறகு அஜித், போனி கபூர் தயாரிப்பிலும், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பிலும் அடுத்தடுத்து இரண்டுப் படங்களில் நடிக்கிறார். ’நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படத்திற்குப் பிறகு அஜித் - போனி கபூர் - எச். வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் மீண்டும் இணையவுள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் ரஷ்யாவில் தொடங்கும் ‘வலிமை’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்தவுடன் ’அஜித் 61’படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்குகின்றது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி மற்றும் ஹைதராபாத்தில் தொடங்குகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் அஜித் 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் கால்ஷீட் தருவார் என்றும் கூறப்படுகிறது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com