\
“எல்லோரும் சொல்வதை விடவும் சிறந்தவர் அஜித்” - ஜிப்ரான்

“எல்லோரும் சொல்வதை விடவும் சிறந்தவர் அஜித்” - ஜிப்ரான்

“எல்லோரும் சொல்வதை விடவும் சிறந்தவர் அஜித்” - ஜிப்ரான்
Published on

'நாம் விரைவில் இணைந்து பணியாற்றுவோம்' என நடிகர் அஜித்குமார் தெரிவித்ததாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

‘வாகை சூடவா’ திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஜிப்ரான். ‘வாகை சூடவா’, ‘விஸ்வரூபம்2’,‘உத்தம வில்லன்’,‘பாபநாசம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மெலடியில் ஹிட் கொடுப்பதில் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். 

சமீபத்தில் வெளியான ‘ராட்சசன்’ திரைப்படத்தில் இவரது இசை அதிகம் கவனம் பெற்றது. பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் ஜிப்ரான், விரைவில் அஜித்துடன் இணைய உள்ளார். இந்தத் தகவலை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''இது உண்மையான ரசிகனுக்கான தருணம். எல்லோரும் சொல்வதை போலவும், அதைவிட சிறந்தவராகவும் அஜித் குமார் இருக்கிறார். அவர் என்னிடம் நிறைய பேசினார். ஆனால் ''நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்'' என்பது மட்டும் என் காதில் திரும்ப திரும்ப ஒலிக்கிறது'' என்று தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஜிப்ரான் பகிர்ந்துள்ளார்.

‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com