“சித்தார்த் அபிமன்யூ கேரக்டருக்கு அஜித்தைதான் முதலில் யோசித்தோம்”: மோகன் ராஜா

“சித்தார்த் அபிமன்யூ கேரக்டருக்கு அஜித்தைதான் முதலில் யோசித்தோம்”: மோகன் ராஜா
“சித்தார்த் அபிமன்யூ கேரக்டருக்கு அஜித்தைதான் முதலில் யோசித்தோம்”: மோகன் ராஜா

தனி ஒருவன் திரைப்படத்தில் அரவிந்த் சாமியின் கதாப்பாத்திரத்துக்கு முதலில் நடிகர் அஜித்குமாரைதான் மனதில் நினைத்திருந்தோம் என்று இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியானது "தனி ஒருவன்" திரைப்படம். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இத்திரைப்படத்தை மோகன் ராஜா இயக்கியிருந்தார். இப்படத்துக்கு முன்பு வரை ரீமேக் படங்களையே இயக்கி வந்த மோகன் ராஜா, முதல் முறையாக தன்னுடைய சொந்தக் கதையை இயக்கியிருந்தார். இப்படம் மக்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்படம் மிகவும் சுவாரஸ்யமான திரைக்கதையைக் கொண்டதாக அமைந்தது. மேலும், நடிகர் அரவிந்த் சாமி நடித்திருந்த சித்தார்த் அபிமன்யூ கதாப்பாத்திரம் பரவலாகப் பேசப்பட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பின்பு தமிழில் நடித்த அரவிந்த் சாமிக்கு, பெரும் திருப்புமுனை தனி ஒருவன் படத்தின் மூலம் கிடைத்தது. இந்நிலையில், முதலில் சித்தார்த் அபிமன்யூ கதாப்பாத்திரத்துக்கு நடிகர் அஜித்குமாரை நடிக்க வைக்கலாம் என யோசித்திருந்ததாக இயக்குநர் மோகன் ராஜா அண்மையில் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். அரவிந்த் சாமியை அணுகுவதற்கு முன்பு பல்வேறு நடிகர்களை சித்தார்த் அபிமன்யூ கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க இருந்தோம் எனக் கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்த மோகன் ராஜா "சித்தார்த் அபிமன்யூ கதாப்பாத்திரத்தை அஜித் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், அது நடக்கவில்லை. அரவிந்த் சாமி கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்கக் கன்னட நடிகர் சுதீப், தெலுங்கு நடிகர் ரானா ஆகியோரும் கதை விவாதத்தின்போது எங்களது யோசனையிலிருந்தனர்" எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com