வடசென்னையில் வலம் வரும் விசுவாசம்: தீபாவளி வெளியீடு!
அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் - இயக்குனர் சிவா கூட்டணியில் தயாராகும் 4வது திரைப்படம் ‘விசுவாசம்’. அஜித்-சிவா கூட்டணியில் உருவான அனைத்து படங்களின் தலைப்பும் வி-ல் தொடங்கி ம்-ல் முடியும். அதே பாணியில் இந்த படத்தின் தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பூஜை அண்மையில் எளிமையாக சிவாவின் அலுவலகத்தில் போடப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த மாத இறுதியில் படப்பிடிப்பும் தொடங்குகிறது.
கடந்த 8 படங்களில் தொடர்ந்து சால்ட்-பெப்பர் கெட்டப்பில் வலம் வந்த அஜித், இந்தப்படத்தில் ஹேர் கலரிங்குடன் ரசிகர்களுக்கு விருந்தளிப்பார் எனக் கூறப்படுகிறது. அத்துடன் இந்த படத்தின் கதைக்களம் ‘வேதளாம்’ படத்தில் வரும் ஃப்ளாஸ் பேக் போல், வடசென்னையின் நிலவரத்தை பிரதிபலிக்கும் என தகவல் தெரியவந்துள்ளது. மேலும் இந்தப் படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது என்றும் கூறப்படுகிறது.