\
அடுத்தவாரம் வெளியாகும் அஜித்தின் ‘வலிமை’ டீசர்?

அடுத்தவாரம் வெளியாகும் அஜித்தின் ‘வலிமை’ டீசர்?

அடுத்தவாரம் வெளியாகும் அஜித்தின் ‘வலிமை’ டீசர்?
Published on

அஜித்தின் 'வலிமை' டீசர் அடுத்தவாரம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின், இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் சமீபத்தில் ரஷ்யா சென்று படப்பிடிப்பை முடித்தனர். அங்கு, அஜித்தின் பைக் சாகச காட்சிகளும் படமாக்கப்பட்டன. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிந்ததால் அஜித் ரசிகர்கள் 'வலிமை' ரிலீஸ் அப்டேட்டுக்காக காத்திருக்கிறார்கள்.

இதனால், ‘வலிமை’ வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது என்று முன்பு தகவல் வெளியானது. ஆனால், ’வலிமை’ஆயுதபூஜை வெளியாகும், அப்படி இல்லை என்றால் டிசம்பரில் வெளியாகும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ‘வலிமை’ டீசர் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com