\
’வலிமை’ படப்பிடிப்பு நிறைவு: வைரலாகும் அஜித் புகைப்படங்கள்

’வலிமை’ படப்பிடிப்பு நிறைவு: வைரலாகும் அஜித் புகைப்படங்கள்

’வலிமை’ படப்பிடிப்பு நிறைவு: வைரலாகும் அஜித் புகைப்படங்கள்
Published on

ரஷ்யாவுக்கு ‘வலிமை’ படப்பிடிப்புக்காகச் சென்ற அஜித்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியாத நிலையில் தள்ளிப்போனது. தற்போது படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதால், சமீபத்தில் முக்கியமான இணைப்புக் காட்சிகளை ஹைதராபாத்தில் எடுத்து முடித்தது படக்குழு.

படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி மட்டும் எடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், அதற்காக அஜித் உள்ளிட்ட 'வலிமை' படக்குழுவினர் ரஷ்யா சென்றிருந்தனர்.ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ரஷ்யாவின் மாஸ்கோவில் தொடங்கிய படப்பிடிப்பில் சண்டைக்காட்சி மற்றும் இறுதிக்காட்சிகளை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ’வலிமை’படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதையொட்டி படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இந்த நிலையில், ரஷ்யாவில் அஜித் பைக்கில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மேலும், அஜித் ஷூட்டிங் நிறைவடைந்ததையொட்டி ரஷ்யாவில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ததாகவும், மேலும் உலகம் முழுவதும் 5000 கிலோமீட்டர் பைக்கிலேயே பயணம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின், இந்த எக்ஸ்குளுசிவ் புகைப்படங்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியாகியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com