\
போலீஸ் அதிகாரியாக மீண்டும் நடிக்கிறார் அஜீத்?

போலீஸ் அதிகாரியாக மீண்டும் நடிக்கிறார் அஜீத்?

போலீஸ் அதிகாரியாக மீண்டும் நடிக்கிறார் அஜீத்?
Published on

தனது அடுத்த படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜீத் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு அடுத்தப் படத்துக்கு ரெடியாகி விட்டார் அஜீத். இந்தப் படத் தையும் ’நேர்கொண்ட பார்வை’யை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார். அந்தப் படத்தை தயாரித்த, போனி கபூர், ஜீ ஸ்டூடியோஸூடன் இணைந்து தயாரிக்கிறார். 

இதன் ஷூட்டிங் நவம்பரில் தொடங்குகிறது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது. அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்து வினோத்தும் போனி கபூரும் இப்போது பேசிவருவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் பைக் ரேஸராக அஜீத் நடிக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. இப்போது அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இதை உறுதிப்படுத்தவில்லை. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com