அஜித்தின் வில்லனுக்கு 15வது ஆண்டு பிறந்தநாள்

அஜித்தின் வில்லனுக்கு 15வது ஆண்டு பிறந்தநாள்
அஜித்தின் வில்லனுக்கு 15வது ஆண்டு பிறந்தநாள்

அஜித் நடிப்பில் வெளியான வில்லன் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளி வந்த திரைப்படம் வில்லன். இதில் இரண்டு வேடங்களில் அஜித் நடித்திருந்தார். அஜித் திரை வாழ்க்கையில் அதிகமாக பேசப்பட்ட படங்களில் இதற்கு தனி இடம் உண்டு. இந்தப் படத்தில் அஜித் மற்றும் கருணாஸ் இடம் பெற்ற காமெடி காட்சிகள் இன்றுவரை வலை தளங்களில் மீம்ஸூக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது 2002 ஆம் ஆண்டு வெளியானது. இந்த வருடத்திடன் 15வது ஆண்டை நிறைவு செய்கிறது. அதனை ட்விட்டர் பக்கத்தில் அவரது ரசிகர்கள் #15YrsOfBlockbusterVILLAIN என்று ஹேஸ்டேக் போட்டு கொண்டாடி வருகிறார்கள். இந்த ஹேஸ்டேக் இன்று ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட்டாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com