\
மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய ’வலிமை’ படக்குழு

மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய ’வலிமை’ படக்குழு

மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய ’வலிமை’ படக்குழு
Published on

’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இன்று தொடங்கியது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 15-ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியாத நிலையில் தள்ளிப்போனது. தற்போது படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளித்துள்ளதால், முக்கியமான சண்டைக் காட்சிகளும் இணைப்புக் காட்சிகளும் எடுக்கப்படவுள்ளன. சண்டைக் காட்சிகளை வெளிநாட்டில்தான் எடுக்கத் திட்டமிட்டுள்ளார் வினோத்.

இந்த நிலையில், சண்டைக் காட்சிகளுக்கு முன்பாக இணைப்புக் காட்சிகளை மூன்று நாட்கள் படமாக்க திட்டமிட்டது படக்குழு. ஹைதராபாத்தில இன்று முதல் இணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com