தல60: இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புகைப்படம்!

தல60: இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புகைப்படம்!

தல60: இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புகைப்படம்!
Published on

தல60 திரைப்படத்துக்காக தனது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து  இளைமை தோற்றத்துக்கு நடிகர் அஜித் மாறியுள்ளார். அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

அஜித் - ஹெச்.வினோத் கூட்டணியில் கடந்த 8ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம்  நேர்கொண்ட பார்வை. இந்தியில் வெளியான பிங்க் திரைப்படத்தின் ரீமேக்காக இந்த திரைப்படம் உருவானது. நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்தார்.

இதற்கிடையே அடுத்த படம் குறித்தும் அறிவிப்பையும்  வெளியிட்டார் போனி கபூர். அதே கூட்டணியுடன் 'ஏகே60 படம் உருவாகும் என்றும், ஆகஸ்ட் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கலாம் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்துக்காக அஜித் தனது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து இளமை தோற்றத்துக்கு மாறியுள்ளார். இளமையான தோற்றத்துடன் வெளியான அஜித்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com