ஆளில்லா குட்டி ஹெலிகாப்டரை இயக்கும் அஜித்... இணையத்தில் வைரல்..!
ஆளில்லா குட்டி ஹெலிகாப்டரை இயக்கும் அஜித்தின் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.
நடிகர் அஜித் ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பின் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வரும் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்த முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிவடைந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக சென்னையிலுள்ள ‘கோகுலம் ஸ்டூடியோ’வில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்புக்கு மத்தியில், காஞ்சிபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியுடன் அஜித் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலான.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை அன்று, பெரிய மைதானம் ஒன்றில் நடிகர் அஜித் ஆளில்லா குட்டி ட்ரோன் ஹெலிகாப்டரை இயக்கும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. அஜித் இதில் மிக இயல்பான உடையில் உள்ளார். இதனை அவரது ரசிகர்கள் தீவிரமாக ஷேர் செய்து வருகின்றனர்.
வெளியாக உள்ள ‘வலிமை’ படத்தில் அஜித், காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் உடல் எடையை குறைத்து இளமையான தோற்றத்திற்கு மாறியுள்ளதுடன் பெப்பர் அண்ட் சால்ட் தோற்றத்தை கைவிட்டு இளமையான தோற்றத்திற்கும் மாறியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். மேலும் படத்தினை போனி கபூர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.