பாலிவுட் நடிகை கொய்னா மித்ரா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகயான கொய்னா மித்ரா அஜித்துடன் அசல் படத்திலும், விக்ரமுடன் தூள் படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் மூக்கு அறுவை சிசிக்கை மேற்கொண்டார். இந்நிலையில் அவரது மொபைல் போனுக்கு தெரியாத நம்பரில் இருந்து கடந்த ஒருவாரத்தில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட முறை போன் வந்திருக்கிறது. நேற்று மாலை அந்த அழைப்பை எடுத்துப் பேசியுள்ளார்.
மறுமுனையில் பேசியவர், “உன்னுடன் ஒருநாள் இன்பமாக இருக்க வேண்டும்” எனக் கேட்டு மீண்டும் மீண்டும் வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான கொய்னா மித்ரா, மும்பை மாநகர காவல்நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரை ஏற்று பெண்களை தகாத முறையில் அவமானப்படுத்துவது உள்ளிட்ட இந்திய சட்டம் 509-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர்.
கொய்னா மித்ரா, சூர்யா நடித்த அயன் படத்தில் ‘ஹனி.. ஹனி’ பாடலுக்கும் நடனமாடியுள்ளார். தூள் படத்தில் ‘கொடுவா மீசை அருவா பார்வை’ பாடலில் விக்ரமுடன் நடனமாடியுள்ளார். அஜித்துடன் அசல் படத்திலும் நடித்துள்ளார்.