மீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்

மீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்

மீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்
Published on

நடிகர் அஜித்குமாரின் 59வது திரைப்படம் வரும் 2019ஆம் ஆண்டு மே 1ஆம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம். இது அஜித்-சிவா கூட்டணியில் உருவாகியுள்ள 4வது திரைப்படம் ஆகும். இதைத்தொடர்ந்து அஜித் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார்? என்ற கேள்விகள் சினிமா உலகில் எழுந்து வந்தது. இந்நிலையில் அதற்கு விடைகூறும் வகையில் அஜித்தின் 59வது படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியினுடைய கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படம் பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக தமிழில் தயாரிக்கப்படுகிறது. இதனை ‘சதுரங்கவேட்டை ’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களின் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கவுள்ளார். 

இந்தப் படத்தின் பூஜை இன்று தொடங்கப்பட்ட நிலையில், படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகும் என போனி கபூர் தெரிவித்துள்ளார். அத்துடன் அஜித்தின் 60வது திரைப்படத்தையும் தங்கள் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாகவும், 2019ஆம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்படும் அந்தப்படம் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் கபூர் கூறியுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com