‘விஸ்வாசம்’ அஜித்தின் அடுத்த அதிரடி ‘ஜெக மல்லா’

‘விஸ்வாசம்’ அஜித்தின் அடுத்த அதிரடி ‘ஜெக மல்லா’
‘விஸ்வாசம்’ அஜித்தின் அடுத்த அதிரடி ‘ஜெக மல்லா’

அஜித்தின் ‘விஸ்வாசம்’ கன்னட மொழியில் டப் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பொங்கல் பண்டிகையையொட்டி 10 ஆம் தேதியன்று திரைக்கு வந்த திரைப்படம் ‘விஸ்வாசம்’.இதில் நயகனாக அஜித் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிததிருந்தார். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகியுள்ளது. இது தமிழகம் முழுவதும் வசூலை அள்ளி குவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ‘வேதாளம்’, ‘வீரம்’,‘விவேகம்’ படங்களை தொடர்ந்து  நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்த இயக்குநர் சிவாவிற்கு இப்படம் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள சுமார் ஆயிரம் திரையங்களில் ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ திரைப்படங்கள் வெளியாகி இருந்தன. முதல்நாள் வசூல் தொடங்கி, அடுத்தடுத்த வசூல் வரை லாப கணக்குகள் தொடர்ச்சியாக வெளியானது. சென்னை மற்றும் உலக அரங்கில் ‘பேட்ட’ படமும், தமிழக அளவில் ‘விஸ்வாசம்’ படமும் வசூலில் முன்னிலை வகிப்பதாக பேசப்பட்டது. தமிழ்நாட்டில் ஒருவார வசூலாக ‘விஸ்வாசம்’ 85 கோடியும் ‘பேட்ட’ 58 கோடியும் ஈட்டியுள்ளதாக  மேலோட்டமான தகவல் வெளியானது. இது கடந்த வாரம் நிலவரம்தான். இந்த வாரமும் இந்த இருப்படங்களும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. ஆகவே அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தை பற்றி புதியதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ‘விஸ்வாசம்’ விரைவில் கன்னட மொழியில் ‘ஜெக மல்லா’ என்ற தலைப்பில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை கன்னட மொழியில் ‘ஸ்டுடியோ ஹரிசான்’ மற்றும் ‘ஹரியு கிரியேஷன்’ வெளியிட உள்ளனர். அதற்கான பணிகள் நடைப்பெற்று வருகின்றது.

‘விஸ்வாசம்’ படத்தில் தம்பிராமையா, விவேக், யோகிபாபு, கோவை சரளா, ரோபோ சங்கர், ஜெகபதி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் அஜித் தற்போது நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com