அனிருத் இசையில் அஜித்‘விசுவாசம்’?

அனிருத் இசையில் அஜித்‘விசுவாசம்’?
அனிருத் இசையில் அஜித்‘விசுவாசம்’?

அஜித் நடிக்க உள்ள ‘விசுவாசம்’படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

‘விவேகம்’படத்தை அடுத்து இயக்குநர் சிவா இயக்க உள்ள திரைப்படம் ‘விசுவாசம்’. ‘விவேகம்’எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் இந்தப் படத்தை வெற்றியடைய செய்துவிட வேண்டும் என்று மிகப் பெரிய சுமை இயக்குநர் சிவாவின் தோளை அழுத்த ஆரம்பித்திருக்கிறது. இன்னொரு பக்கம் சிவாவிற்கே தொடர்ந்து அஜித்  வாய்ப்பளித்து வருவதால் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக செய்திகள் வலம் வருகின்றன. இந்தப் படத்தில், அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கலாம் என்ற பேச்சும் அடிப்படுகிறது. ஏற்கெனவே‘விசுவாசம்’படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய இரு படங்களுக்கு அனிருத்தான் இசையமைத்திருந்தார். ஆனால் ‘விசுவாசம்’ படத்துக்கு அவர் இசையமைக்க போவதில்லை என தகவல்கள் வெளியாகின. 

முதலில் யுவன் சங்கர் ராஜா, ‘விசுவாசம்’படத்துக்கு இசையமைப்பதாக கூறப்பட்டது. ஆனால், வேறு சில நடைமுறை சிக்கலால் அவர் விலகிக் கொண்டதாக தெரிய வருகிறது. இவரை தொடர்ந்து ‘விக்ரம் வேதா’ படத்திற்கு இசையமைத்த சாம் சி.எஸ்.ஸிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிகிறது. ஆனால் அதுவுமே உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இறுதியாக அனிருத் ஒப்பந்தம் செய்துள்ளாதாக தெரிகிறது. ஆனால் படக்குழு இதை இன்னும் உறுதி செய்யவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com