அஜித் நடிக்கும் விவேகம் படத்தில் இடம்பெற்றுள்ள ’சர்வைவா...’ என்ற முழுப் பாடலும் சாவன் என்ற இணையதளத்தில் நேற்று வெளியானது.
சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உட்பட பலர் நடிக்கும் படம், விவேகம். அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்துக்காக ஏழு பாடல்களை உருவாக்கி இருக்கிறார் அனிருத். இதில் முதல் பாடல், ’சர்வைவா...’ இதை சில நாட்களுக்கு முன் டீசராக வெளியிட்டிருந்தனர். இப்போது முழுப்பாடலையும் வெளியிட்டுள்ளனர். சாவன் என்ற இணையதளத்தில் இந்தப் பாடல் வெளியானது. அனிருத்துடன் இணைந்து யோகி பி பாடியுள்ளார். யோகி பியும் மாலி மனோஜும் பாடலை எழுதியுள்ளனர்.