\
இரண்டு நாட்களில் ‘நேர்கொண்ட பார்வை’ ரூ.30 கோடி வசூல்

இரண்டு நாட்களில் ‘நேர்கொண்ட பார்வை’ ரூ.30 கோடி வசூல்

இரண்டு நாட்களில் ‘நேர்கொண்ட பார்வை’ ரூ.30 கோடி வசூல்
Published on

‘நேர்கொண்ட பார்வை’ வெளியான இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.30 கோடி வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தமிழக விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். 

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன ‘பிங்க்’ படத்தின் ரீமேக் ஆக ‘நேர்கொண்ட பார்வை’ தமிழில் உருவானது. இதனை  ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய வினோத் இயக்கினார். ‘பிங்க்’ படத்தில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் குமார் நடித்துள்ளார். 

பெண் உரிமையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் கடந்த 8ம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இரண்டு நாட்களாக திரையரங்குகளில் கூட்டம் நிரம்பியது. இன்றும், நாளையும் வார விடுமுறை என்பதால் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.30 கோடி வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தமிழக விநியோகஸ்தர் ராகுல் தெரிவித்துள்ளார். 

புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த ராகுல் இதனை தெரிவித்தார். மேலும் விடுமுறை அல்லாத நாட்களில் வெளியான திரைப்படங்களில் வேறு எந்தத் திரைப்படமும் ஈட்டாத வசூலை இப்படம் வசூலித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com