சிம்புதேவன் இயக்க உள்ள இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நகைச்சுவை நடிகராக கலக்கி வந்த வடிவேலு முதன் முறையாக இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் நாயகான நடித்திருந்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்து சில படங்களில் நாயகனாக மட்டுமே நடித்து வந்த வடிவேலு சில ஆண்டுகளாக ஓய்வெடுத்து வந்தார். தற்போது மெர்சல் படத்தில் விஜயுடன் நடித்து வரும் அவர், அடுத்து ஷங்கர் தயாரிக்க உள்ள இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.
இந்தப்படத்தில் பில்லா-2 வில் அஜித்துடன் நாயகியாக நடித்த பார்வதி ஓமக்குட்டன் வடிவேலுவுடன் ஜோடி சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு நீரவ்ஷாவிடம் உதவியாளராக இருந்த சரவணன் ஒளிப்பதிவாளராகவும், ஜிப்ரான் இசையமைப்பாளராகவும், விவேக் ஹர்சன் எடிட்டராகவும், முத்துராஜ் கலை இயக்குநராகவும் பணியாற்ற உள்ளனர்.