\
உலகையே பைக்கில் சுற்றிய மாரல் யசார்லூவுடன் க்யூட் லுக்கில் அஜித்: வைரல் போட்டோஸ்

உலகையே பைக்கில் சுற்றிய மாரல் யசார்லூவுடன் க்யூட் லுக்கில் அஜித்: வைரல் போட்டோஸ்

உலகையே பைக்கில் சுற்றிய மாரல் யசார்லூவுடன் க்யூட் லுக்கில் அஜித்: வைரல் போட்டோஸ்
Published on

உலகம் முழுக்க பைக்கில் தனியாக பயணம் செய்த சாகசப் பெண்மணி மாரல் யசார்லூவுடன் ஹேண்ட்சம் லுக்கில் அஜித் பைக்குடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விரைவில் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் ஹீமா குரேஷி ஹீரோயினாக நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில், ‘வலிமை’ படத்தில் இடம்பெறும் பைக் சாகசக் காட்சிகளுக்காக படக்குழு கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3 ஆம் தேதிவரை ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அங்கு, படத்தில் மட்டுமல்லாமல் தனியாகவும் அஜித் பைக்கில் சுற்றிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. அதோடு, சென்னை வந்தவுடன் ஹைதராபாத்திலும் அஜித் நடிகர் நவ்தீப்புடன் பைக் ரேஸில் கலந்துகொண்டார். அந்தப் புகைப்படங்களும் வெளியாகின.

நடிகர் அஜித் தற்போது டெல்லி சென்றுள்ளார். அங்கு தாஜ்மஹாலில் அவர் ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் சூழலில், அஜித் உலகம் முழுவதும் பைக்கிலேயே தனியாக பயணம் செய்த மாரல் யசார்லூவை டெல்லியில் சந்தித்து உரையாடினார். இதுவரை 7 கண்டங்களையும் 64 நாடுகளையும் பைக்கிலேயே சுற்றிய மாரல் யசார்லூ தற்போது டெல்லி வந்துள்ளார். எதிர்காலத்தில் பைக்கிலேயே உலகம் முழுக்க பயணம் செய்ய திட்டமிட்டுள்ள அஜித், அவரது ஆலோசனைகளையும், டெல்லி அனுபவத்தையும் கேட்டறிந்தார்.

அந்தப் புகைப்படங்கள் வெளியான நிலையில், தற்போது செம்ம ஹேண்ட்சம் லுக்கில் அஜித் மாரல் யசார்லூவுடன் பைக்குடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்தப் புகைப்படங்களில் அஜித் கொள்ளை அழகாக இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் கருத்திட்டு வருகிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com