\
ஆளில்லா விமானத்தை இயக்கி மகிழ்ந்த அஜித்

ஆளில்லா விமானத்தை இயக்கி மகிழ்ந்த அஜித்

ஆளில்லா விமானத்தை இயக்கி மகிழ்ந்த அஜித்
Published on

நடிகர் அஜித் சினிமாவில் மட்டுமில்லாது, கார் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என பல்வேறு துறைகளிலும் ஆர்வம் கொண்டவராய் திகழ்கிறார். பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஏரோ மாடலிங் செய்து வந்த அஜித், அதுதொடர்பாக எம்.ஐ.டி-ல் உள்ள ‘தக்‌ஷா’ என்ற மாணவர்கள் அணியுடன் இணைந்து பணியாற்றினார். அந்த பணியின்போது, அதிக நேரம் வானில் பறக்கக்கூடிய ஆளில்லா விமானத்தை அந்த அணி கண்டுபிடித்தது. அந்த விமானம் கல்லூரி அளவிலான போட்டியில் முதல் இடத்தைப் பிடித்தது. 

பின்னர் ஆஸ்திரேலியாவில் நடந்த யுஏஇ மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலன்ஞ் போட்டிக்கு தகுதிபெற்றது. நீண்ட நேரம் பறத்தல் மற்றும் தேவைப்படும்போது உடனடியாகத் தரை இறங்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நட்டத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் சேலன்ஞ் போட்டியில், உலக அளவில் 8 அணிகள் பங்கேற்றன. இதில் அடுத்தடுத்த படிக்கு முன்னேறிய தக்‌ஷா அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. அஜித் பங்கேற்ற அணி உலக அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பினர். இதைத்தொடர்ந்து வெற்றிக்கான சான்றிதழை பெற்ற அஜித்திடம் காண்பித்து தக்‌ஷா அணி வாழ்த்து பெற்றது. 

அத்துடன் தங்கள் அணி கண்டுபிடித்த ஆளில்லா விமானத்தை, அணியில் உள்ள மாணவர்களுடன் இணைந்து அஜித் இயக்கிப்பார்த்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அத்துடன் அணியுடன் இணைந்து அஜித் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com