துப்பாக்கி சுடும் போட்டியில் அடுத்த லெவலுக்கு முன்னேறிய அஜித்
துப்பாக்கி சுடும் போட்டியில் அடுத்த லெவலுக்கு முன்னேறிய அஜித்
அஜித் ஒரு நடிகர் என்றாலும் அதைத் தவிர்த்து மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறைகளிலும் ஈடுபட்டு வருபவர். சமீபத்தில் அஜித் இணைந்து பணியாற்றிய தக்ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடந்த UAE மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது.
அந்த வகையில் கோவையில் நடைபெற்று வரும் 45 ஆவது தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று அஜித் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து அவரது புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின. இந்தப் போட்டி கடந்த 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகம் சார்பில் 800 நபர்கள் 5 பிரிவுகளின் கீழ் போட்டியிட்டனர்.
இதில் நடிகர் அஜித் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சென்னை ரைபிள் கிளப் சார்பில் பங்கேற்றார். இந்த போட்டியில் நான்கு சுற்றுகளில் பங்கேற்ற அஜித் 400 பாயிண்டுகளுக்கு 314 பாயிண்டுகளை பெற்றுள்ளார். இதன்மூலம் அஜித் போட்டியின் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறியிருப்பதாக கூறப்படுகிறது.