அஜித்தின் 28 வருடங்கள் திரைப்பயணம் : ட்ரெண்டிங்கை தெறிக்கவிடும் ரசிகர்கள்
நடிகர் அஜித் குமார் சினிமாத் துறைக்கு வந்து 28 வருடங்கள் ஆவதை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இல்லையென்றாலும், அங்கெல்லாம் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார். மற்ற நடிகர்களுக்கெல்லாம் படம் வெளியீடு, ஃபர்ஸ்ட் லுக், பாடல், டிரைலர் வெளியீடு அல்லது பிறந்த நாள் என்றால் தான், அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்வார்கள். ஆனால் தொட்டதுக்கெல்லாம் ட்ரெண்ட் செய்து, அதனை உடனே இந்திய அளவு ட்ரெண்டிங்காக மாற்றுவது அஜித் ரசிகர்கள். உதாரணத்திற்கு அஜித் பிறந்த நாள் வருவதற்கு முன்பே, பிறந்த நாட்களுக்கு இன்னும் நூறு நாட்கள் தான் இருக்கிறது என்று ட்ரெண்ட் செய்வார்கள். மற்ற நடிகர்களின் ஹேஷ்டேக் ஏதேனும் ட்ரெண்டிங்கில் இருந்தால், உடனே அஜித் தொடர்பான ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்வார்கள்.
இதேபோன்று மற்ற நடிகர்களின் பிறந்த நாளை கொண்டாட அவர்களின் ரசிகர்கள் பொது டிபி (CDP) எனப்படும் பொதுவான புகைப்படத்தை தங்கள் டிபி-யாக வைப்பார்கள். இந்நிலையில் அஜித் திரையுலகிற்கு வந்து 28 வருடங்கள் ஆனதற்கே அவரது ரசிகர்கள் பொது டிபி-யை (முகப்புப்படம்) உருவாக்கி, அதனை பகிர்ந்து ட்ரெண்ட் செய்துள்ளார். #28YrsOfAjithismCDPBlast என்ற ஹேஷ்டேக்கை பகிர்ந்து வரும் அஜித் ரசிகர்கள், சில மணி நேரங்களுக்குள் ஒரு மில்லியன் #ஹேஷ்டேக்குகளை பகிர்ந்துவிட்டனர். இதனால் அது இந்திய ட்ரெண்ட்கில் சென்றுவிட்டது.
ரசிகர்கள் மட்டுமின்றி இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர்கள் பிரேம்ஜி, பிரசன்னா, மகத் உள்ளிட்ட பலரும் அஜித் ரசிகர்கள் உருவாக்கிய பொது டிபியை பகிர்ந்து, ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளனர்.

