தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளரை ட்விட்டரில் அடிச்சிதூக்கிய தல ரசிகர்கள்

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளரை ட்விட்டரில் அடிச்சிதூக்கிய தல ரசிகர்கள்

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளரை ட்விட்டரில் அடிச்சிதூக்கிய தல ரசிகர்கள்
Published on

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினின் ட்விட்டர் பக்கத்தில் அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் போஸ்டரை பதிவிட்டு திணறடித்துள்ளனர்.

சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே நடிகர்கள் நடிகைகள் மத்தியில் யார் முதலிடம் பிடிப்பது என்பது போன்ற போட்டி நிலவி வருவது வாடிக்கையான ஒன்றுதான். மற்றத்துறைகளிலும் இந்தப் போட்டி இருக்கிறது. ஆனால் சினிமாத் துறையில் அது வெளிப்படையாக காண்பிக்கப்பட்டு வருகிறது.

எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித், தனுஷ் - சிம்பு, என வாழையடி வாழையாக தொடர்ந்து கொண்டே வருகிறது. முந்தைய நடிகர்கள் மத்தியில் ரசிகர்களிடையே பெரிதாக மனக்கசப்பும் சண்டைகளும் இருந்ததில்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் விஜய் - அஜித் ரசிகர்களை அவ்வளவு சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. இவர்களின் காலக் கட்டத்தில் இணையதளத்தின் பங்களிப்பும் வெகுவாக சம்பந்தப்பட்டுள்ளது.

நேருக்கு நேராக சண்டை போட்டு கொள்வதை தடுத்து தற்போது இணையதளத்தில் வார்த்தைகள் மூலம் சண்டைகள் அரங்கேறி வருகிறது. விஜய் ரசிகர்களை அஜித் ரசிகர்கள் வாருவதும், அஜித் ரசிகர்களை விஜய் ரசிகர்கள் வாருவதும் வாடிக்கையான ஒன்று. ஆனால் திடீரென வேறு யாராவது உள்ளே புகுந்தால் இரண்டு தரப்பு ரசிகர்களும் சேர்ந்து சம்பந்தமில்லாதவர்களை வாரி இவர்களுக்குள் பாசமழை பொழிவார்கள்.

இதற்காக அவர்கள் பெரிதும் கையில் எடுக்கும் ஆயுதம் ட்விட்டராகத்தான் இருக்க முடியும். தற்போதைய காலக் கட்டத்தில் சர்கார் படத்துடன் விஜய் அலை சற்று ஓய்ந்திருக்கிறது. ஆனால் அஜித் அலை ஓங்க ஆரம்பித்துள்ளது. அதற்கு காரணம் அவரின் விஸ்வாசம் ரிலீஸ்தான். சிவா இயக்கத்தில் 4 வது முறையாக கூட்டணி சேருகிறார் அஜித். ரஜினிகாந்தின் பேட்ட படத்துடன் போட்டி போட பொங்கலுக்கு வெளி வருகிறது விஸ்வாசம். இப்படத்திற்கு இமான் முதல் முதலாக அஜித்துக்கு இசையமைத்துள்ளார்.

’பேட்ட’ படத்தின் முதல் பாடல், இரண்டாம் பாடல், இசைவெளியீட்டு விழா, மோஷன் போஸ்டர் என அடுத்தடுத்து அப்டேட் வந்து கொண்டே இருந்தது. ஆனால் ’பேட்ட’ படத்திற்கு முன்னதாக அறிவிப்பு வெளியிட்ட விஸ்வாசம் படக்குழு எந்த அப்டேட்டையும் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு ட்விட்டர் வலைதளத்தையே மீம்ஸ் மூலம் திணறடித்தனர்.

இதனால் ஒரு கட்டத்தில் விஸ்வாசத்தின் ’அடிச்சிதூக்கு’ பாடல் கடந்த 10 ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு போஸ்டருடன் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்து அந்த போஸ்டரை வலைதளத்தில் பரப்பி வந்தனர்.

இந்நிலையில் அதே 10 ஆம் தேதி காலை தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், " என்ன நடக்கிறது ட்விட்டரில்" என தனது பதிவில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள் சும்மா விடுவார்களா? அஜித்தின் விஸ்வாசம் பாடல் வெளியீடு போஸ்டரை அவரது கமெண்டில் பதிவிட்டு திணறடித்துள்ளனர். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com