”அஜித் ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பு வியப்படைய வைத்துள்ளது” - ஹூமா குரேஷி

”அஜித் ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பு வியப்படைய வைத்துள்ளது” - ஹூமா குரேஷி
”அஜித் ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பு வியப்படைய வைத்துள்ளது” - ஹூமா குரேஷி
Published on

‘வலிமை’ வெளியாகி வரவேற்பு பெற்று வருவதையொட்டி, அதில் நாயகியாக நடித்துள்ள பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி மனம் திறந்து பேசியுள்ளார்.

“அஜித் ரசிகர்களின் அளவற்ற அன்பும், பாசமும் என்னை வியப்படைய செய்துள்ளது. இந்நேரத்தில் அஜித் குமார் ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அஜித் சாருடன் பணிபுரிய வேண்டும் என்கிற எனது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகியுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த கதாபாத்திரத்தை, எனக்கு பரிசளித்த அஜித் சார், போனி கபூர் மற்றும் இயக்குனர் எச்.வினோத் ஆகியோருக்கு நன்றி. ஒட்டுமொத்தமாக இது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது, மேலும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எனக்கு ஒரு முழுமையான ஒரு நல்ல அனுபவத்தை அளித்துள்ளது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தற்போது, ஹுமா குரேஷி, நடிகர் மஹத் ராகவேந்திராவுடன் ’டபுள் எக்ஸ்எல்’ திரைப்படத்திலும் ‘கங்குபாய் காத்தியாவதி’ படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார், மேலும், ‘மித்யா’ வெப் சீரிஸ், நெட்ஃபிக்ஸ் ஒரிஜினல் ‘மோனிகா, ஓ மை டார்லிங்’ ஆகியவற்றில் நடிக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com