\
திருநெல்வேலி: ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுத்து விஜய் பிறந்தநாளைக் கொண்டாடிய அஜித் ரசிகர்கள்

திருநெல்வேலி: ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுத்து விஜய் பிறந்தநாளைக் கொண்டாடிய அஜித் ரசிகர்கள்

திருநெல்வேலி: ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுத்து விஜய் பிறந்தநாளைக் கொண்டாடிய அஜித் ரசிகர்கள்
Published on: 

நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி திருநெல்வேலி அஜித் ரசிகர்கள் 100 பேருக்கு உணவு வழங்கியுள்ளனர்.

இந்தியா – பாகிஸ்தான் எல்லை பிரச்னையைக்கூட தீர்த்துவிடலாம். ஆனால், தமிழின் முன்னணி நடிகர்களான விஜய் – அஜித் ரசிகர்களின் சண்டையை மட்டும் நிறுத்தவே முடியாது என்பதுபோல் சமூக வலைதளங்களில் விஜய், அஜித் ரசிகர்கள் அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள்.

அதேபோல, விஜய் – அஜித் படங்கள் வரும்போதெல்லாம் ட்ரெண்ட் செய்து சமூக வலைதளங்களை ட்ரெண்ட் செய்து மாஸ் காட்டுகிறார்கள். இந்நிலையில்,  திருநெல்வேலி ’அல்வா சிட்டி அஜித் ஃபேன்ஸ்’ வித்தியாசமாக  ’அஜித்தின் நண்பர் விஜய். அதனால், அவரது பிறந்தநாளையும் கொண்டாடுவோம்’ என்றுக்கூறி நட்புடன் விஜய்யின் 47 வது பிறந்தநாளையொட்டி இன்று காலை 100 பேருக்கு உணவு வழங்கி சிறப்பித்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை குவித்து வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com