’ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ்’ ஆக அஜித்: வலிமை படத்தின் புது அப்டேட்!

’ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ்’ ஆக அஜித்: வலிமை படத்தின் புது அப்டேட்!
’ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ்’ ஆக அஜித்: வலிமை படத்தின் புது அப்டேட்!

 ‘வலிமை’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வரும் அஜித்தின் பெயர்  ‘ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ்’ என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

 மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்த  நேர்கொண்ட பார்வை கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று வெற்றி இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி இருந்தார். நேர்கொண்ட பார்வையின் வெற்றியால், இக்கூட்டணி மீண்டும் ’வலிமை’ படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தில், அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். கடந்த மாதம்தான், இப்படத்தின் ஷூட்டிங் சென்னையின் புறநகர் பகுதிகளில் நடந்தது. அதில், அஜித் பைக் ரேசிங் காட்சிகளிலும் நடித்தார். தற்போது ஐதராபாத்தில் ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்நிலையில், வலிமை படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் அஜித்தின் பெயர் ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதனைத்தொடர்ந்து, அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ் என்று ட்ரெண்டிங் ஆக்கி ட்விட்டரை தெறிக்கவிட்டுள்ளார்கள். ஏற்கனவே, அஜித்  மங்காத்தா, என்னை அறிந்தால் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com