கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா... ஒரே மேடையில் தல, தளபதி..?

கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா... ஒரே மேடையில் தல, தளபதி..?

கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா... ஒரே மேடையில் தல, தளபதி..?

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய பிறந்தநாளை இன்று கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இந்தப் பிறந்தநாள் கமல்ஹாசனுக்கு மேலும் சில பெருமைகளை சேர்த்துள்ளது. அதாவது, கலைத்துறையில் தன்னுடைய 60 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். இதனை கொண்டாடும் வகையில் இன்று முதல் தொடர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்ட தமிழ், ஹிந்தி, தெலுங்கு திரையுலகினா் பலரும் கலந்து கொள்கின்றனா். இதன் ஒரு பகுதியாக திரையுலகினா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. கமல்ஹாசனின் பிறந்தநாளான இன்று அவரது தந்தை டி.சீனிவாசனின் நினைவு தினமும் கூட. இதையொட்டி, அவரது சொந்த ஊரான பரமக்குடியில் காலை 10.30 மணிக்கு சீனிவாசனின் சிலை திறக்கப்பட்டது. இதில் கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளும், அவரது குடும்பத்தினரும் கலந்துக்கொண்டனர்.

இதனையடுத்து நவம்பர் 8-ஆம் தேதி காலை 9.30-க்கு சென்னையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் கமல்ஹாசனின் திரையுலக குருவான இயக்குநா் கே.பாலசந்தரின் சிலை திறக்கப்பட உள்ளது. இதில் பாலசந்தா் குடும்பத்தினா் கலந்து கொள்கின்றனா். மதியம் 3.30 மணிக்கு, மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை சத்யம் திரையரங்கில் ‘ஹேராம்’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது. படம் முடிந்ததும், கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் கமல் கலந்து கொண்டு பதிலளிக்கிறார்.

கமலின் 60 ஆண்டுகால கலைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக இசையமைப்பாளா் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி வரும் 17-ம் தேதி நடக்கிறது. இந்நிகிழ்ச்சிக்கான ஒத்திகை நடந்து வருகிறது. கமல்ஹாசனுக்கு இளையராஜா இசையமைத்த பாடல்களை தனது குழுவினருடன் மேடையில் பாட திட்டமிட்டுள்ளார் இளையராஜா.

இந்நிகழ்ச்சியில் கமலை நேரில் வாழ்த்த இந்திய சினிமா பிரபலங்கள் முதல் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா என பலர் பங்கேற்க உள்ளனர். அண்மையில் சோஷியல் மீடியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் புகைப்படங்கள் கொலாஜ் செய்யப்பட்டு ஃபேன் பேஸ்ட் அழைப்பிதழ் ஒன்று வைரலானது.

மேலும் பல ஆண்டுகளுக்கு பின்பு அஜித் இந்நிகழ்ச்சியில் நிச்சயம் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது மேடைகளில் கலந்துக்கொள்வதை தவிர்த்து வந்த அஜித் கமலுக்கான பாராட்ட விழாவில் பங்கேற்பார் என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அஜித் தரப்பிலிருந்து வரவில்லை என்றாலும், திரையுலகின் மூத்த நடிகரான கமல்ஹாசனைப் பாராட்டுவதற்காக அஜித் வருவார் என கூறப்படுகிறது. அப்படி வந்தால் தல, தளபதியை ஓரே மேடையில் காணும் வாய்ப்பு அவர்களது ரசிகர்களுக்கு கிடைக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com