அஜித் பிரமிப்பு.... விஜய் ஜாலி..... காஜல் கருத்து
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் காஜல் அகர்வால். தமிழில் ஒரே நேரத்தில் விஜயுடன் மெர்சல் படத்திலும், அஜித்துடன் விவேகம் படத்திலும் நாயகியாக நடித்து இருக்கிறார்.
இந்நிலையில் அஜித்துக்கும் விஜய்க்கும் உள்ள வித்தியாசம் என்ன எனக்கேட்டால், "அஜித்துடன் விவேகம் எனக்கு முதல் படம் என்பதால் பிரமிப்பாக இருந்தது. அவர் ஒரு அற்புதமான மனிதர். எல்லோரிடத்திலும் மரியாதை கொடுத்து பழகக்கூடியவர். முழுமையான ஈடுபாட்டுடன், அர்ப்பணிப்போடு உழைக்கக்கூடிய அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது" என்கிறார்.
"நான் ஏற்கெனவே விஜயுடன் மெர்சல் படத்திற்கு முன்பே இரண்டு முறை நடித்திருக்கிறேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக இருப்பார். ஷாட் வைத்து விட்டால் அவரிடம் எனர்ஜி தொற்றிக்கொள்ளும். தனிப்பட்ட முறையில் அவர் அன்பான மனிதர். அபார உழைப்பால் சிறந்த மனிதராக உயர்ந்திருக்கிறார். அவருடைய ஒர்க்கிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும்" என்கிறார்.