\
அஜித் - வினோத் கூட்டணியில் புதுப்படம் ஆகஸ்ட் முடிவில் தொடங்குகிறது - போனிகபூர்

அஜித் - வினோத் கூட்டணியில் புதுப்படம் ஆகஸ்ட் முடிவில் தொடங்குகிறது - போனிகபூர்

அஜித் - வினோத் கூட்டணியில் புதுப்படம் ஆகஸ்ட் முடிவில் தொடங்குகிறது - போனிகபூர்
Published on: 

அஜித் - ஹெச்.வினோத் கூட்டணியுடன் ஆகஸ்ட் மாத முடிவில் அடுத்த படத்திற்கான பூஜை நடைபெறவுள்ளதாக போனி கபூர் தெரிவித்துள்ளார். 

இந்தி படமான, ‘பிங்க்’  ‘நேர்கொண்ட பார்வை’என்ற தலைப்பில் தமிழில் ரீமேக் ஆகிறது. அமிதாப் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் அஜித்குமார் நடித்துள்ளார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லிகணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். இதை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகும் நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அனைவரும் பெரிய நன்றி. அஜித் குமார், ஹெச்.வினோத் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் ஆகியோருடன் ஏகே60 படம் ஆகஸ்ட் இறுதியில் பூஜை உடன் தொடங்குகிறது’ என குறிப்பிட்டுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அஜித் குமார், ஹெச்.வினோத் மற்றும் ஜி ஸ்டுடியோ கூட்டணியுடன் புதிய படம் ஆகஸ்ட் மாத இறுதியில் பூஜையுடன் தொடங்கவுள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டரில் இந்த தகவலை அவர் பதிவிட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com