அஜித் நடிக்கும் 58வது திரைப்படமான விஸ்வாசம் திரைப்படத்தின் பூஜை இயக்குநர் சிவா அலுவலகத்தில் எளிமையாக நடைபெற்றது.
நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் சிவா ஆகியோர் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய மூன்று படங்களை தொடர்ந்து 4வது திரைப்படமாக விஸ்வாசம் படத்தில் இணைந்துள்ளனர். இதில் வீரம் கிராமத்து பணியிலான கதையிலும், வேதாளம் தாதாக்களின் கதைக் களத்திலும் வெளியாகின. ஆனால் இவை இரண்டுக்கும் முற்றிலும் மாறாக விவேகம் முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பங்களை கொண்ட அதிரடி திரைப்படமாக வெளியானது.
இந்த மூன்று படங்களையும் தொடர்ந்து நான்காவது படமாக விஸ்வாசம் படமும் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையக்கிறார். மங்காத்தா படத்தில் அஜித்திற்காக யுவன் போட்ட தீம் மியூசிக் பிரம்மாண்ட ஹிட் ஆக, தற்போது மீண்டும் அஜித் படத்திற்கு இவர் இசையமைப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ரூபன் ஒளிப்பதிவு செய்கிறார். சக்திஜோதி ஃபிலிம்ஸ் இதனை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் அஜித் சால்ட்-அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலை மாற்றிவிட்டு கலரிங்க் செய்துள்ளார். 2018ஆம் ஆண்டு தீபாவளிக்கு படத்தை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
சமூக வலைதளத்தில் தற்சமயம் படத்திற்கு பூஜை போட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.