\
வைரலாகும் அஜித் 57 பட பர்ஸ்ட் லுக் செய்தி

வைரலாகும் அஜித் 57 பட பர்ஸ்ட் லுக் செய்தி

வைரலாகும் அஜித் 57 பட பர்ஸ்ட் லுக் செய்தி
Published on

சிறுத்தை சிவாவுடன் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள அஜித்தின் 57வது பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு ஆகியவை நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெயர்சூட்டப்படாத இந்த படம் அஜித்தின் 57வது படம் என்பதால் அவரது ரசிகர்கள் ‘தல 57’ என்ற ஹாஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அஜித்தின் சால்ட் அன் பெப்பர் லுக்கில் ஒரு புகைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த புகைப்படம் தல 57 என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரவியது. அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ். இந்நிலையில் அஜித்தின் 57 வது படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு ஆகியவை இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com