அஜீத்தை கலாய்த்த சூரி!

அஜீத்தை கலாய்த்த சூரி!

அஜீத்தை கலாய்த்த சூரி!
Published on

’ஜீ’ படத்தில் நடித்த போது, நடிகர் அஜீத்தை கலாய்த்து நான் பேசியவதற்காகக படக்குழுவால் பாராட்டப் பெற்றேன்’ என்று நடிகர் சூரி சொன்னார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சூரி, கூறியதாவது:

சினிமா ஆசையில் 96-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். ஆர்ட் டைரக்டர்களிடம் உதவியாளராக வேலை பார்த்தேன். பெயின்டிங் வேலை உட்பட பல்வேறு வேலைகளை செய்திருக்கிறேன். ’சூரி வந்தா ஜாலியா இருக்கும்’ என்று சொல்லியே என்னை வேலைக்கு அழைத்துச் செல்வார்கள். ஏனென்றால் எனக்கு வேலை தெரியாது. அப்படியே வளர்ந்தேன். நாடகங்களில் நடித்தேன். 

’காதல்’ படத்தில் நடித்துக் காட்டி வாய்ப்பு வாங்கினேன். என் நடிப்பை பார்த்து இயக்குனர் பாலாஜி சக்திவேல், மேன்சனில் உடலெல்லாம் எண்ணெய் தேய்த்துக்கொண்டு இருப்பது போன்ற காட்சியில் நடிக்க வைத்தார். பிறகு ’ஜீ’ படத்தில் அஜீத் சாருடன் இரண்டு காட்சிகளில் நடித்தேன். அந்தப் படத்தில் கல்லூரி தேர்தலில் அஜீத் டீம் வெற்றி பெற்றுவிடும். நான் அவர்களுக்கு எதிர் டீம். அஜீத் நடந்து போகும்போது நான் அவரை கலாய்க்க வேண்டும். நான் வாய்க்கு வந்த மாதிரி பேசிவிட்டேன். டைரக்டர் லிங்குசாமி, ‘கட்’ என்று சொல்லிட்டு, என்னை கூப்பிட்டார். எனக்குப் பயம். ’இப்ப என்ன பேசினீங்க?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார். எனக்கு கையும் காலும் படப்படக்க ஆரம்பித்துவிட்டது. அப்படியே ஓடிடலாமா என்று நினைத்தேன். பிறகு திடீர் என்று எல்லாரும் என்னை கட்டிப்பிடித்துப் பாராட்டினார்கள். காட்சி யதார்த்தமாக இருந்ததாக அஜீத் உட்பட எல்லோரும் வாழ்த்தினார்கள். அப்படி வந்து இன்னைக்கு வளர்ந்திருக்கேன். இதற்கு இயக்குனர்களும் காரணம். இன்னும் காமெடியில மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது என் ஆசை.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com