ரூ.7 கோடிக்கு கார் வாங்கிய இந்தி ஹீரோ அஜய் தேவ்கன்!

ரூ.7 கோடிக்கு கார் வாங்கிய இந்தி ஹீரோ அஜய் தேவ்கன்!
ரூ.7 கோடிக்கு கார் வாங்கிய இந்தி ஹீரோ அஜய் தேவ்கன்!

இந்தி ஹீரோ அஜய்தேவ்கன் ரூ.7 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராயஸ் கல்லினன் காரை வாங்கியுள்ளார்.

பிரபல இந்தி ஹீரோ அஜய்தேவ்கன். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் இவர், பாலிவுட் ஹீரோயின் கஜோலின் கணவர். இவர், ராஜமவுலி இயக்கும் ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் இப்போது நடித்து வருகிறார். இவர், கார் பிரியர். ஏராளமான ஆடம்பர கார்களை வைத்திருக்கும் அஜய்தேவ்கன், இப்போது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் என்ற காரை வாங்கியுள்ளார்.
இதன் விலை, ரூ.6.95 கோடி ரூபாய்! இந்தியாவில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, டி-சீரிஸ் அதிபர் பூஷன் குமார் ஆகியோர் மட்டுமே இந்த வகை கார்களை வைத்துள்ளனர்.

அஜய் தேவ்கனிடம் ரேஞ்ச் ரோவர், பிஎம்டபிள்யு 5 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் -எஸ்- கிளாஸ், ஆடி க்யூ 7, மெர்சிடிஸ் ஜிஎல் கிளாச், வால்வோ எக்ஸ்சி 90 உட்பட பல கார்கள் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com