மகள் இயக்கும் புதியப் படத்தில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த்? - கதாநாயகன் இவரா?

மகள் இயக்கும் புதியப் படத்தில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த்? - கதாநாயகன் இவரா?
மகள் இயக்கும் புதியப் படத்தில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த்? - கதாநாயகன் இவரா?

லைகா புரொடக்ஷன்ஸ் பேனரில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த மாதம் பூஜையுடன் புதியப் படத்தை துவங்க உள்ளதாகவும், அதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ‘ஜெயிலர்’ படத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘அண்ணாத்தே’ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்பெற்றாலும், சீரியல் போன்று இருப்பதாக கடும் விமர்சனங்களை சந்தித்தது. இதனால் ரசிகர்களை கவரும் வகையிலான படத்தை கொடுப்பதற்காக ரஜினிகாந்த், ‘ஜெயிலர்’ படத்தின் கதையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அருத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனுஷ் - ஸ்ருதிஹாசன் நடிப்பில் ‘3’, கௌதம் கார்த்திக் -ப்ரியா ஆனந்த் நடிப்பில் ‘வை ராஜா வை’ படங்களைத் தொடர்ந்து, புதியப் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், கதாநாயகனாக அதர்வா நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், தனது மகளுக்காக இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்திற்கான பூஜை அடுத்த மாதம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தெரிகிறது. தமிழ் சினிமாவில் ‘3’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்பது அனைவரும் அறிந்தது.

ஏற்கனவே கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படப்பிடிப்பு நாள்வரை ஸ்கிரிப்ட் எழுதுவதை நிறுத்த முடியாது என்று, ஸ்கிரிப்ட் எழுதுவது போன்ற புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படம் ஒன்றுடன் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com