ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் திரைப்படமாகிறது சவுரவ் கங்குலியின் வாழ்க்கை? ஹீரோ யாரு?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை, திரைப்படமாக உருவாக இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட இருக்கிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, கங்குலியாக நடிக்கிறார்.

சவுரவ் கங்குலி, ஆயுஷ்மான் குரானா
சவுரவ் கங்குலி, ஆயுஷ்மான் குரானாபுதிய தலைமுறை

இதற்காக, ஆயுஷ்மான் குரானா சில மாதங்கள் கிரிக்கெட் பயிற்சி எடுத்துக்கொள்ள இருப்பதாகவும் கங்குலியைச் சந்தித்து அவரது முழு வாழ்க்கையைப் பற்றியும் தெரிந்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. ஏற்கெனவே கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் கேப்டன் தோனி ஆகியோரது வாழ்க்கை திரைப்படங்களாக எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com