ரீடேக் ராணி ஐஸ்வர்யா ராஜேஷ்

ரீடேக் ராணி ஐஸ்வர்யா ராஜேஷ்

ரீடேக் ராணி ஐஸ்வர்யா ராஜேஷ்
Published on

‘காக்கா முட்டை’என்ற ஒரே படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவருடைய நடிப்பு திறமைக்கு அங்கீகாரமாக பாலிவுட் வாய்ப்பும் அவருக்கு எளிதாக கிடைத்தது. தற்போது அவர் ‘டாடி’என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். 

அர்ஜுன் ராம்பால் கேங்ஸ்டராக நடிக்கும் இந்தப் படத்தில், அவருடைய மனைவியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
கதைப்படி அந்த கேரக்டரில் அவர் ஹிந்தி மற்றும் மராத்தி மட்டுமே பேசவேண்டும். ஆனால், ஐஸ்வர்யாவுக்கு இரண்டு மொழிகளும் தெரியாது. எனவே, முதல் நாளே டயலாக் பேப்பரை வாங்கி, பேசிப்பேசி பழகி நடித்திருக்கிறார். ஆனாலும் சில சமயங்களில் நடிப்பதில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. மொழிப் பிரச்னையால் சில காட்சிகளில் 25 முறை கூட டேக் வாங்கினாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனால் செட்டில அவரை அனைவரும் ரீடேக் ராணி என்றும் விளையாட்டாக கிண்டல் செய்து வருகிறார்களாம். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com