\
லஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த அதிரடி

லஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த அதிரடி

லஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த அதிரடி
Published on

அம்மணி படத்தை தொடர்ந்து தான் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை முக்கிய ரோலில் நடிக்க வைக்க லஷ்மி ராமகிருஷ்ணன் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஆண் இயக்குனர்கள் நிறைந்த கோலிவுட் திரையுலகில் தன்னை தைரியமான இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டவர் லஷ்மி ராமகிருஷ்ணன். நடிகையாக மட்டுமில்லாமல் சமூக பிரச்னைகளுக்கும் தைரியமாக குரல் கொடுப்பவர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான அம்மணி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இயக்குனராக தனது அடுத்த படத்தை தொடங்கியிருக்கிறார். இதற்கான கதாநாயகிகள் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டு வரும் லஷ்மி ராமகிருஷ்ணன், சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை சந்தித்து பேசியிருக்கிறார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள லஷ்மி ராமகிருஷ்ணன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு சிறந்த நடிகை என தெரிவித்துள்ளார். பெண்கள் சம்பந்தப்பட்ட கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் லஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் எனத் தெரிகிறது. எனினும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

வெற்றி மாறன் இயக்கத்தில் வடசென்னை படத்திலும், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com