\
ஐஸ்வர்யா ராஜேஷின் 'டிரைவர் ஜமுனா' படத்தை தீபாவளிக்குப் பிறகு வெளியிட திட்டம்

ஐஸ்வர்யா ராஜேஷின் 'டிரைவர் ஜமுனா' படத்தை தீபாவளிக்குப் பிறகு வெளியிட திட்டம்

ஐஸ்வர்யா ராஜேஷின் 'டிரைவர் ஜமுனா' படத்தை தீபாவளிக்குப் பிறகு வெளியிட திட்டம்
Published on: 

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவரும் 'டிரைவர் ஜமுனா' திரைப்படத்தை தீபாவளி பண்டிகைக்கு பிறகு வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்தத் திரைப்படத்தை 'வத்திக்குச்சி' பட இயக்குநர் கின்ஸ்லின் இயக்க, எஸ்.பி.செளத்ரி தயாரிக்கிறார்.

'டிரைவர் ஜமுனா' திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கியது. இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் டாக்ஸி ஓட்டுநராக நடிக்கிறார். வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகி வரும் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களில் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் நிறைவடைந்துவிடும் என படக்குழு தரப்பில் கூறியுள்ளனர்.

அத்துடன், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகளை முடித்து தீபாவளிக்கு பிறகு 'டிரைவர் ஜமுனா' படத்தை வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டிருக்கிறார்.

இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிட உள்ளனர். இந்தப் படத்தை தவிர ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தின் ரீமேக்கும் உருவாகியுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புள்ளது என திரைத்துறையில் கூறுகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com