\
ஐஸ்வர்யா ராயுடன் நடிப்பது மகிழ்ச்சி: அனில் கபூர்

ஐஸ்வர்யா ராயுடன் நடிப்பது மகிழ்ச்சி: அனில் கபூர்

ஐஸ்வர்யா ராயுடன் நடிப்பது மகிழ்ச்சி: அனில் கபூர்
Published on

ஐஸ்வர்யாராயுடன் கபூர் தாள் படத்தில் நடித்திருந்தேன் அவருடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று அனில் கபூர்  கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ராயுடன் ஏற்கெனவே இரண்டு படங்களில் நடித்துள்ளார் அனில் கபூர். அவர் மீண்டும் ஃபேனி கான் படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார். இந்தப் படம் ஒரு இசை சம்பந்தப்பட்ட படம். அதில் இருவரும் நடிப்பார்களா? மாட்டார்களா என்று செய்தி பரவியது. இது குறித்து அனில் கபூர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா உடன் ஏற்கெனவே நான் இரு படங்கள் நடித்துள்ளேன். அவர் நல்ல நடிகை. திறமையானவர். அவருடன் நடித்தது சிறப்பான அனுபவம். மறுபடியும் சேர்ந்து நடிப்பதை நினைத்து பார்த்தால் த்ரிலிங்காக உள்ளது. அக்டோபர் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com