நெருக்கமான காட்சிகளில் நடிக்க மறுக்கும் ஐஸ்வர்யா ராய்!

நெருக்கமான காட்சிகளில் நடிக்க மறுக்கும் ஐஸ்வர்யா ராய்!

நெருக்கமான காட்சிகளில் நடிக்க மறுக்கும் ஐஸ்வர்யா ராய்!
Published on

ஃபேனி கான் படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று ஐஸ்வர்யா ராய் மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 

அதுல் மஞ்ரேகர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், அனில் குமார், ராஜ்குமார் ராவ் என பலர் நடித்து வரும் பாலிவுட் படம் ஃபேனி கான். இந்தப் படத்தில் ராஜ்குமார் ராவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஐஸ்வர்யா ராய் மறுத்துள்ளதார். இது குறித்து இயக்குனரிடம் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஃபேனி கான் படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் முதலில் மாதவன் நடிப்பதாக இருந்தது.  மாதவன் அதிக சம்பளம் கேட்டதால் அவரைவிட்டு ராஜ்குமார் ராவை ஒப்பந்தம் செய்தது படக்குழு. 

இந்நிலையில் ஃபேனி கான் படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகளில் நடிக்க மறுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இந்தப் படத்தில் ராஜ்குமார் ராவ் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ஐஸ்வர்யா ராய் தன்னை விட வயதில் சிறியவரான ரன்பிர் கபூருடன் சேர்ந்து நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். அது அவரது குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. அதனால் தற்போது எச்சரிக்கையுடன் முன்கூட்டியே மறுத்துள்ளார் என செய்தி பரவி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com