சினிமா
'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் இணைந்த ஐஸ்வர்யா ராய்
'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் இணைந்த ஐஸ்வர்யா ராய்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்றுள்ளார்.
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது. இதில் முக்கிய காட்சிகளை படமாக்க இயக்குநர் மணிரத்தினம் திட்டமிட்டிருக்கிறார். இதனால் நடிகர்கள் கார்த்திக், பார்த்திபன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பாண்டிச்சேரி சென்று உள்ளனர். அவர்கள் பங்குபெரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறன.
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராயும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்துள்ளர். இங்கு நடைபெறும் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, அனைவரும் ஹைதராபாத் செல்கின்றனர். அங்கு இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அத்துடன் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களுக்கான முழு படப்பிடிப்பும் முடிந்து விடும் எனக் கூறப்படுகிறது.