அமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா உறுதி..!

அமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா உறுதி..!
அமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா உறுதி..!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும், அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது அவர்களது குடும்பத்தில் ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

 பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று இரவில் உறுதியானது. அதனை அவர்களே தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். கொரோனா குறித்து பதிவிட்டிருந்த அபிஷேக் பச்சன், ‘எனக்கும், என் அப்பாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். அனைவரும் பதற்றம் அடையாமல் அமைதி காக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். நன்றி’ எனத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பதிவிட்டிருந்த அமிதாப் பச்சன், “எனக்கு கொரோனா பாசிடிவ். மருத்துவமனைக்கு சென்றுள்ளேன். அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் எனது குடும்பம் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுக்காக காத்திருக்கிறோம். என்னுடன் கடந்த 10 நாட்களாக நெருக்கமாக இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, அபிதாப் பச்சன் குடும்பத்தில் மற்ற யாருக்கும் கொரோனா இல்லை என்றும் தகவல் வெளியானது. ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் வீட்டில் பணியாற்றும் பணியாளர்கள் என அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் தான் என்றும், ஆனாலும் அவர்கள் அனைவரும் கண்காணிப்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. ஆனாலும், ஸ்வாப் டெஸ்ட்டிற்கான முடிவு இன்னும் வரவில்லை எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், பாலிவுட் நடிகையும் அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர்களது மகள் ஆராதனாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டொப் தெரிவித்துள்ளார். இதனால், அமிதாப் குடும்பத்தில் இதுவரை 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com