சிரஞ்சீவியுடன் நடிக்க ஐஸ்வர்யா ராய், நயன்தாரா நிபந்தனை!

சிரஞ்சீவியுடன் நடிக்க ஐஸ்வர்யா ராய், நயன்தாரா நிபந்தனை!

சிரஞ்சீவியுடன் நடிக்க ஐஸ்வர்யா ராய், நயன்தாரா நிபந்தனை!
Published on

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய், நயன்தாரா நிபந்தனை விதித்துள்ளதால் படக்குழு தவித்து வருகிறது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, இடையில் அரசியலுக்குச் சென்றதால் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். பிறகு 150-வது படத்தில் நடிக்க கதை தேடி வந்தார். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ’கத்தி’ ரீமேக்கில் நடிக்க முடிவு செய்தார். பின்னர்தான் பிரச்னை. அவருடன் நடிக்க எந்த ஹீரோயினும் முன் வரவில்லை. அவர் மகன் ரவிச்சரணுடன் நடித்துக்கொண்டிருக்கும் ஹீரோயின்கள், அவர் அப்பாவுக்கு எப்படி ஜோடியாக நடிப்பது என்றே பயந்தனர். சீனியர் ஹீரோவுடன் நடித்தால் மற்ற ஹீரோக்கள் ஒதுக்கிவிடுவார்கள் என்பதும் ஹீரோயின்களின் பயத்துக்கும் காரணம். பின்னர் ராம்சரண் சொன்னதற்காக, காஜல் அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்தாராம்.

இந்நிலையில் அடுத்தப் படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டர் சிரஞ்சீவி. உய்யலவாடாவில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய, நரசிம்ம ரெட்டி என்ற பாளையக்காரரின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது. இதில் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியாக நடிக்கிறார் சிரஞ்சீவி. சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்தப் படத்துக்கும் ஹீரோயின் தேடி வருகின்றனர். இதற்கு 3 ஹீரோயின்கள் தேவை. ஐஸ்வர்யா ராய், நயன்தாரா ஆகியோரிடம் கேட்டுவருகின்றனர். ரூ. 125 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் நடிக்க இருவருமே அதிக தொகை கேட்டு நிபந்தனை விதித்துள்ளனர். இதனால், சம்பளத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ஆனால் அவ்வளவு தொகை தந்தால்தான் நடிக்க முடியும் என்று இருவருமே நிபந்தனை விதித்துள்ளார்களாம். அது எவ்வளவு தொகை என்பதை படக்குழு தெரிவிக்கவில்லை.
ராம் சரணுடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த வரலாற்றுப் படம், தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com