\

மகளிர் தின ஸ்பெஷல்: ஐஸ்வர்யா தனுஷின் நடனம்..!

மகளிர் தின ஸ்பெஷல்: ஐஸ்வர்யா தனுஷின் நடனம்..!
Published on

ரஜினிகாந்தின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, மகளிர் தினத்தில் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக பயிற்சி பெரும் ஒரு நடன கிராபிக்ஸ் புகைப்படத்தை அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யாவை கடந்த ஆகஸ்ட் மாதம் ஐக்கிய நாடுகள் சபை தென்னிந்திய பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமித்தது. உலகம் முழுவதும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெறவிருக்கும் மகளிர் தினவிழாவில் ஐஸ்வர்யா பங்கேற்கவுள்ளார். இதற்காக நடன பயிற்சியில் ஈடுபடுவது போன்று ஒரு கிராபிக்ஸ் புகைப்படத்தை தனது டுவிட்டார் பக்கத்தில் ஐஸ்வர்யா தனுஷ் பதிவு செய்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com