\
ஐஸ்வர்யா ராயின் மகள் வருங்கால பிரதமரா ?

ஐஸ்வர்யா ராயின் மகள் வருங்கால பிரதமரா ?

ஐஸ்வர்யா ராயின் மகள் வருங்கால பிரதமரா ?
Published on

அமிதாப் பச்சனின் பேத்தியும், ஐஸ்வர்யாராயின் மகளும் ஆன ஆர்த்யா இந்தியாவின் வருங்கால பிரதமராக வருவார் என பிரபல ஜோதிடர் கியானேஷ்வர் கணித்துள்ளார்.

2018ஆம் ஆண்டின் புதிய ஜோதிட கணிப்புகளை வெளியிட்டுள்ள கியானேஷ்வர், ஐஸ்வர்யாராயின் மகள் ஆர்த்யா தனது பேரை ரோகினி என மாற்றிக்கொண்டார் என்றால் அவர் இந்தியாவின் வருங்கால பிரதமராக வருவார் என கணித்துள்ளார். இவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் அரசியலுக்கு வருவார்கள் என ஏற்கெனவே துல்லியமாக கணித்துவர். அத்துடன் 2009ஆம் ஆண்டு ஆந்திராவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் கணித்தார். இந்நிலையில் தான் ஐஸ்வர்யாராயின் மகள் குறித்த இத்தகைய கணிப்பை கியானேஷ் வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் ஆகியோர் மீண்டும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், ரஜினிகாந்த் தமிழக முதலமைச்சராக வருவார் என்றும் கணித்துள்ளார். அதுவும் ரஜினிகாந்தின் கட்சி இடைத்தேர்தலுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். அத்துடன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 2024ஆம் ஆண்டு போர் வரும் என்றும், முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு 2019ஆம் ஆண்டில் திருமணம் நடைபெறும் என்றும் கணித்துள்ளார். இவை அனைத்தும் 2018ஆம் ஆண்டிற்கு பிறகு நடக்குக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com