கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம், ’துருவ நட்சத்திரம்’. இதில் ஹீரோயினாக அனு இம்மானுவேல் நடித்தார். கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் விலகிக் கொண்டதை அடுத்து, வேறு ஹீரோயின் தேடி வந்தார் கவுதம் வாசுதேவ் மேனன். இப்போது ’காக்கா முட்டை’ ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக ரிது வர்மா நடிக்கிறார். மற்றும் பார்த்திபன், பிருத்விராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் மகன் சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.