“ரஜினி குறித்த காட்சி நீக்கப்படும்” -‘கோமாளி’ படத் தயாரிப்பாளர்

 “ரஜினி குறித்த காட்சி நீக்கப்படும்” -‘கோமாளி’ படத் தயாரிப்பாளர்
 “ரஜினி குறித்த காட்சி நீக்கப்படும்” -‘கோமாளி’ படத் தயாரிப்பாளர்

‘கோமாளி’ படத்தில் ரஜினி குறித்த காட்சி நீக்கப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் ‘கோமாளி’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில், ஜெயம் ரவி 16 வருடங்கள் கோமாவில் இருக்கிறார். பின்னர் ஜெயம் ரவி எழுந்து பார்க்கும்போது, இது எந்த வருடம் எனக் கேட்கிறார். அதற்கு யோகி பாபு இது 2016-ஆம் ஆண்டு என்கிறார். அந்த நேரத்தில், டிவியில் ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருப்பார். அதனைப் பார்க்கும் ஜெயம் ரவி இது 1996தான் 2016 அல்ல என்பார். ரஜினியும் அவரின் அரசியல் வருகை குறித்த பேச்சும் நீண்ட காலமாகவே நிலவி வரும் நிலையில் அதனை விமர்சிக்கும் வகையில் இந்தக் காட்சி அமைந்திருக்கிறது.

இதையடுத்து ‘கோமாளி’ ட்ரெய்லரில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த விமர்சனத்தை பார்த்த கமல் வருத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ‘கோமாளி’ படத்தில் ரஜினி குறித்த காட்சி நீக்கப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். மேலும் ‘கோமாளி’ டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிக்கு கமலும் வருத்தம் தெரிவித்ததாக ஐசரி கணேஷ் குறிப்பிட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com