‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் 'அகலாதே' பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் எனப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
இந்தி படமான, ‘பிங்க்’ ‘நேர்கொண்ட பார்வை’என்ற தலைப்பில் தமிழில் ரீமேக் ஆகிறது. அமிதாப் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் அஜித்குமார் நடித்துள்ளார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லிகணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். இதை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதன் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'வானில் இருள்', ‘தீ முகம்’, இடிஎம் பாடல் ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் 'அகலாதே' பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் எனப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். மேலும் அஜித், வித்யாபாலன் இருக்கும் போஸ்டர் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். ‘நேர்கொண்ட பார்வை’ படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகவுள்ளது.