சினிமா
நீட் மற்றொரு படுகொலையை நிகழ்த்திவிட்டது: பா.ரஞ்சித் சாடல்
நீட் மற்றொரு படுகொலையை நிகழ்த்திவிட்டது: பா.ரஞ்சித் சாடல்
நீட் மற்றொரு படுகொலையை நிகழ்த்தி விட்டதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால் விழுப்புரம் மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த பெருவளூர் கிராமத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித், “ நீட் மற்றொரு படுகொலையை நிகழ்த்தி விட்டது. கல்வி உரிமை மறுப்பு நம் ஒத்துழைப்புடனே நிகழ்த்துகிறார்கள். வழக்கம்போல் படிக்க திறன் அற்றவர்கள் சாவதே மேல் என எழுதி தள்ளுவார்கள். யாரிடம் நம்உரிமையை கேட்கிறோம் என்று உணராமலே தலைமுறை கனவை அடக்கம் செய்து நகர்வோம்..அடுத்த படுகொலைகள் நோக்கி!” என கூறியுள்ளார்.