ரூ.100 கோடி கிளப்பை நோக்கி ‘சர்தார்’ - இயக்குநருக்கு, தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்!

ரூ.100 கோடி கிளப்பை நோக்கி ‘சர்தார்’ - இயக்குநருக்கு, தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்!
ரூ.100 கோடி கிளப்பை நோக்கி ‘சர்தார்’ - இயக்குநருக்கு, தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்!

கார்த்தியின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்தார்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றியடைந்துள்ள நிலையில், இயக்குநர் பி. எஸ். மித்ரனுக்கு தயாரிப்பாளர் புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

கார்த்தி, லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, சங்கி பாண்டே உள்பட பலர் நடிப்பில், தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘சர்தார்’. தண்ணீரை வைத்து நடக்கும் முறைகேடு மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் ஆகியவற்றை மையமாக வைத்து ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது ‘சர்தார்’ திரைப்படம். இந்தப் படம் திரையரங்குகளில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழ்நாட்டில் வெளியிட்டு இருந்தது. பி.எஸ். மித்ரன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். 12 நாட்களிலேயே இந்தப் படம் சுமார் 85 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. தற்போது திரையரங்குகளில் ஓரளவு வரவேற்பு உள்ளதால், விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் இயக்குநர் பி.எஸ். மித்ரனுக்கு, தயாரிப்பாளர் லக்ஷ்மன் லான்சன் புதியக் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். புதிய காரின் சாவியை நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ். மித்ரனிடம் கொடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com